Monday, October 24, 2016

1000 திரைகளில் ‛காஷ்மோரா


1000 திரைகளில் ‛காஷ்மோரா



24 அக்,2016 - 17:08 IST






எழுத்தின் அளவு:








கார்த்தியின் இரண்டு வருட கடுமையான உழைப்பில், மிக அதிக பொருட்செலவில், பல செட்களை அமைத்து பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது - காஷ்மோரா படம். கோகுல் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ள கார்த்தி, 3 கெட் அப்பில் தோன்றியிருக்கிறார் கார்த்தி. இப்படத்தில் நயன்தாரா கௌரவ வேடத்தில் நடிக்க, ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடித்துள்ளார்.

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 28ஆம் தேதி உலகமெங்கும் 1000 ஸ்கிரீன்களில் ரிலீஸாக உள்ளதாம் காஷ்மோரா. காஷ்மோராவின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது, ஆந்திரா, தெலுங்கான வெளியிடும் உரிமையை அதாவது தெலுங்கு டப்பிங் ரைட்ஸை கார்த்தியை வைத்து தோழா படத்தைத் தயாரித்த பிவிபி நிறுவனம் வாங்கியுள்ளது.

சினிகோலக்ஸி என்ற நிறுவனம் யுஎஸ்ஏவிலும், டி.எஸ்.ஆர். என்ற நிறுவனம் மலேசியாவிலும் காஷ்மோரா படத்தை வெளியிடுகின்றன. மலேசியாவில் மட்டுமே 50 ஸ்கிரீன்களில் காஷ்மோராவை திரையிட உள்ளனர்.


0 comments:

Post a Comment