மாவீரன் கிட்டு பாடல்கள் நவம்பர் 4-ஆம் தேதி ரிலீஸ்
24 அக்,2016 - 17:43 IST
படத்தின் வெற்றிதான் ஒரு இயக்குநரின் தலை எழுத்தையும் அந்தஸ்த்தையும் தீர்மானிக்கிறது. வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் வெற்றிப்பட இயக்குநராக வெளிப்பட்ட சுசீந்திரன் கார்த்தி, விஷால் என முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கி வந்தார். சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான சில படங்கள் வெற்றியடையவில்லை.
இதையடுத்து மீண்டும் சுசீந்திரன்-விஷ்ணு கூட்டணி சேர்ந்தது. அதன்படி சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன் கிட்டு' படம் ஏறக்குறைய ரெடியாகிவிட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதம் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை நவம்பர் 4-ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். பட வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிக்கவுள்ளனர்.
0 comments:
Post a Comment