கடந்தாண்டு (2015) அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் மற்றும் வேதாளம் ஆகிய இரண்டு படங்கள் வெளியானது.
ஆனால், இந்தாண்டு முடியும் தருவாயை எட்டியுள்ள நிலையில், அஜித் படம் குறித்த எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
தற்போது நடித்து வரும் தல 57 படத்தின் பர்ஸ்ட் லுக்கோ டீசரோ எதுவும் வெளியாகவில்லை.
இதனால் வருத்தம் அடைந்த மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா..?
தல படம் வராத தீபாவளி எங்களுக்கு துக்க தீபாவளி.
அஜித் படம் வராத திரையரங்கு எங்களுக்கு சிறை அரங்கு. தல படம் வரும் நாளே எங்களுக்கு விடுதலை தீபாவளி.. இதுபோன்ற போஸ்டர்கள் எல்லாம் அடித்து ஒட்டியுள்ளனர்.
ஹ்ம்…. சிறையில் இருக்கும் இவர்களை எப்போது அஜித் விடுதலை செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
0 comments:
Post a Comment