Tuesday, October 25, 2016

தனுஷுக்கும் கார்த்திக்கும் போட்டி இல்லையாம்! பின்னே…?








விரைவில் த்ரிஷா நடிக்கப் போகும் படம் ஒன்றின் தலைப்பு கர்ஜனை. அப்படியொரு பெயர் வைத்தாலும் வைத்தார்கள். இழந்த நாற்காலியை பிடித்தே ஆக வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. ஆனால் ஐஸ் பெட்டியில் அடுப்பை வைத்த மாதிரி, நமநமத்துப் போய் கிடக்கிறது அவரது மார்க்கெட். அவர் பேயாக நடித்த படங்கள் எதுவும் போணியாகவில்லை. தெலுங்கிலும் சரி, தமிழிலும் சரி. தொடர் சரிவை சந்தித்து வரும் அவர், கொடியை மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிறார் இப்போது. இந்தப்படத்தில் த்ரிஷாவின் கேரக்டர், இதுவரை அவர் தமிழிலும் சரி. தெலுங்கிலும் சரி. பண்ணவே பண்ணாதது!


பெண் அரசியல்வாதியாக நடிக்கிறாராம். அதுவும் செம டெரர் பீஸ்! இதற்கப்புறம் நீலாம்பரி பிளேஸ் த்ரிஷாவுக்குதான் என்று தகவல்கள் றெக்கை கட்டி பறக்க… த்ரிஷாவின் நினைப்பும் எண்ணமும் இப்போது வேறு கோணத்தில்.



தனுஷ் த்ரிஷா நடித்த கொடியை அதே நாளில் தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். அங்கு த்ரிஷாவுக்கு ஏற்கனவே நல்ல மார்க்கெட் இருந்து வந்தது. நயன்தாராவோ இன்னும் தன் மார்க்கெட்டை அதே உயரத்தில் வைத்திருக்கிறார். நயன்தாரா நடித்த காஷ்மோரா படமும் அங்கு ரத்னமாதேவி என்ற பெயரி வெளி வருகிறது. படத்தில் நயன்தாராவின் பெயரும் அதுதான். அப்படியென்றால் தெலுங்கில் அவரை முன்னிறுத்துகிறார்கள் என்றுதானே அர்த்தம்?


தெலுங்கு விளம்பரங்களில் தனுஷ் கார்த்தி இருவரையும் லேசாக பின்னுக்கு தள்ளிவிட்டு, இந்த பெண்களின் போட்டியைதான் பெரிது படுத்தி வருகிறார்களாம் அங்குள்ள ஊடகங்களும், விநியோகஸ்தர்களும்.


Comments

comments






0 comments:

Post a Comment