திரிஷாவை கடுப்பேற்றும் திருமண கேள்வி!
25 அக்,2016 - 09:06 IST
விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தபோது தெலுங்கிலும் ராணா உள்ளிட்ட நடிகர்களுடன் பிசியாக நடித்து வந்தார் திரிஷா. அப்போது ராணாவுக்கும், அவருக்கும் காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி வந்த நிலையில், அவர்களது திருமண செய்திகள்கூட அவ்வப்போது கசிந்தது. ஆனால் பின்னர் அதை பொய்யாக்கும் வகையில், தயாரிப்பாளர் வருண்மணியனை திரு மணம் செய்து கொள்ள தயாரானார் திரிஷா. ஆனால் திருமணத்திற்கு பிறகு நடிக்கக்கூடாது என்று அவரது குடும்பத்தில் திரிஷாவுக்கு தடை போட்டதால் நிச்சயதார்த்தத்தோடு நின்றுபோனது.
அதையடுத்து மீண்டும் சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் திரிஷா, இப்போது திருமணம் குறித்த எண்ணமே இல்லாமல் நடிப்பிலேயே முழு கவனத் தையும் செலுத்தி வருகிறார். இந்த நேரத்தில் யாராவது எப்போது திருமணம்? என்று திரிஷாவிடம் கேட்டால் அதையடுத்து அவர்களிடம் பேச்சையே குறைத்துக்கொண்டு வருகிறார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடியபோது, ஒரு ரசிகர் திருமணம் குறித்த கேள்வி கேட்க, திருமணம் குறித்து கேட்டு என்னை கடுப்பேற்ற வேண்டாம் என்று அந்த ரசிகருக்கு பதில் கொடுத்துள்ளார் திரிஷா.
0 comments:
Post a Comment