தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.
இவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ரசிகர்கள் பலரும் பல கேள்விகளை கேட்டனர்.
சிலர் திருமணத்தைப் பற்றி கேட்டபோது, அது எனக்கு பிடிக்காத கேள்வி என்று பதிலளித்தார்.
அஜித்-ஷாலினி ஜோடிப் பொருத்தம் பற்றி ரசிகர் ஒருவர் கேட்டதற்கு மேட் பார் ஈச் அதர் (மிக சரியான பொருத்தமான ஜோடி) என்றார்.
விஜய் பற்றி கேட்டபோது, தொழில் பக்தி கொண்டவர். கூடவே அவரது கருணை உள்ளம் பிடிக்கும் என்றார்.
ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் லேடி கெட்டப் குறித்து கேட்டதற்கு ‘அவரது முயற்சி பெரும் ஆச்சரியமானது’ என்றார்.
0 comments:
Post a Comment