Tuesday, October 25, 2016

60 நாடுகளில் ரிலீசாகும் ‛சிவாய்'


60 நாடுகளில் ரிலீசாகும் ‛சிவாய்'



25 அக்,2016 - 15:53 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் அஜய் தேவகனும் ஒருவர். தறிபோது அஜய் நடித்து, இயக்கி, தயாரித்துள்ள படம் ‛சிவாய்'. இப்படத்தில் அஜய் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். ‛சிவாய்' படத்தில் அஜய்யுடன் , சாயிஷா சைகல் , எரிக்கா கார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ‛சிவாய்' படம் ஆக்ஷ்ன் பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமைய உள்ளது. ‛சிவாய்' படத்தை மிகவும் பிரம்மாண்டமான முறையில் இயக்கியுள்ளார் அஜய். தற்போது ‛சிவாய்' படத்தின் இறுதிக்கட்ட புரொமோஷனில் பிஸியாக இருக்கிறார். ‛சிவாய்' படத்தை 60 நாடுகளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இதுப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் மேலும் விசாரித்தப் போது.. ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ‛சிவாய்' படத்தை 60 நாடுகளில் வெளியிட முடிவு செய்து உள்ளனர். 60 நாடுகளில் வெளியாகப்போகும் முதல் பாலிவுட் படம் இது தான் என்கிறார்கள்.

‛சிவாய்' படம் இயக்குநர் கரண் ஜோகர் இயக்கியுள்ள ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்துடன் வருகிற அக்., 28-ம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.


0 comments:

Post a Comment