Tuesday, October 25, 2016

ஒரு படம் பார்க்க 500 ரூபா கொடுப்பீங்களா.? டிக்கெட் ரேட் உயருதாம்!


cinema theatre rajini cutoutsதியேட்டரில் படம் பார்க்க வருபவர்களை நம்பி ஆயிரக்கணக்கானவர்கள் பிழைத்து வருகிறார்கள்.


பார்க்கிங் கட்டணம் முதல் பாப்கார்ன், பப்ஸ், குடி நீர் என அனைத்தையும் கறந்துவிடுகின்றனர். (இதில் சுவையும் ஒன்றும் பெரிதாக இருப்பதில்லை)

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1000 தியேட்டர்கள் உள்ளன.

இவைகளில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் மல்டிபிளக்ஸ் எனப்படும் காம்ப்ளக்ஸில் மூன்று முதல் நான்கு தியேட்டர்கள் வரை உள்ளன.

இவைகளில் அரசு நிர்ணயித்த கட்டணப்படி சராசரியாக ரூ. 120 டிக்கெட் விற்கப்படுகிறது.

ஆனால் மற்ற தியேட்டர்களில் ஹீரோக்களின் மார்கெட் பொறுத்து 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை இருக்கும்.

ரஜினியின் கபாலி படத்திற்கு ரூ. 1000, 2000 வரை விற்கப்பட்டதெல்லாம் வேறுகதை.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக டிக்கெட் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கின் மீதான விசாரணையில் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து அரசு ஒரு மாதத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

அதாவது கிட்டதட்ட ரூ. 350 வரை பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் விற்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.

நாங்க எல்லாம் படம் பாக்குறதா? வேண்டாமா? என்று நீங்கள் சொல்லும் மைண்ட் வாய்ஸை நாங்க கேட்ச் பண்ணிட்டோம் பாஸ்

0 comments:

Post a Comment