தனுஷை நடிக்க வைத்த ராஜ்கிரண்!
25 அக்,2016 - 08:26 IST
தனுஷின் தந்தையான டைரக்டர் கஸ்தூரி ராஜா இயக்கிய முதல் படம் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தில் ராஜ்கிரண்தான் நாயகனாக நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தபோதும் அதன்பிறகு ராஜ்கிரணை வைத்து கஸ்தூரிராஜா எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்த நிலையில், தற்போது தனது தந்தையின் முதல் படநாயகனான ராஜ்கிரணை நாயகனாக வைத்து தனது முதல் படத்தை இயக்கி வருகிறார் தனுஷ்.
மேலும், பவர்பாண்டி என்ற இந்த படத்தில் தனுஷ் இயக்குனராக மட்டுமே செயல்பட திட்டமிட்டிருந்தாராம். ஆனால், அந்த படத்தின் கதையை சொல் தற்கு ராஜ்கிரணை அணுகியபோது, முழுக்கதையையும் கேட்ட அவர், இதில் நீங்கள் எந்த வேடத்தில் நடிக்கப்போகிறீர்கள்? என்று தனுஷிடம் கேட்டபோது. தான் நடிக்கவில்லை என்றாராம். அதைக்கேட்டு, படத்துக்கு கமர்சியல் வேண்டும். நான் கேரக்டர் நடிகராகி விட்டேன். அதனால் தற்போதைய ஒரு ஹீரோ படத்தில் இருந்தால்தான் படம் ரீச்சாகும் என்று சொல்லி தனுஷையும் ஒரு வேடத்தில் நடிக்குமாறு கூறினாராம். அதன்பிறகுதான் தானும் பவர்பாண்டி படத்தில் நடிக்க முடிவெடுத்த தனுஷ், தற்போது தனக்கு ஜோடியாக நடிக்க மடோனாவையும் புக் பண்ணியிருக்கிறார்.
0 comments:
Post a Comment