Sunday, October 23, 2016

விஜய் படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு!


விஜய் படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு!



24 அக்,2016 - 09:17 IST






எழுத்தின் அளவு:








சமீபகாலமாக பிரபல நடிகர்களின் படக்காட்சிகளை செல்போனில் பதிவு செய்து இணையதளங்களில் வெளியிடுவது வழக்கமாக நடந்து வருகிறது. அந்த வகையில், ரஜினியின் கபாலி படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்தபோது அங்கு வேடிக்கை பார்த்த ரசிகர்களே வீடியோ எடுத்து வெளியிட்டனர். அதே போல், சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் 57வது படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடந்தபோதும் அஜீத் நடித்த சில ஷாட்டுகளும் வைரலாக பரவியது. அதையடுத்து பலத்த செக்யூரிட்டி போட்டனர்.

இந்த நிலையில், தற்போது விஜய் நடித்து வரும் பைரவா படத்தின் படப்பிடிப்பு சுவிஸ் நாட்டில் நடந்து வரும் நிலையில், கீர்த்தி சுரேசுடன் விஜய் நடித்து வரும் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது வேடிக்கை பார்க்க வந்த யாரோ ஒருவர் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பைரவா யூனிட் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளது. அதையடுத்து, யூனிட்டுக்கு சம்பந்தமில்லாத நபர்களை வெளியேற்றிவிட்டு தற்போது செக்யூரிட்டி போட்டு படப்பிடிப்பு நடத்தி வருகிறார்களாம். அதேபோல் இறுதிகட்ட பணிகள் நடக்கும்போதும் பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளதாம்.


0 comments:

Post a Comment