கத்தி – லட்சகணக்கான விஜய் ரசிகர்களில் அனைவரையும் திருப்திபடுத்திய ஒரே படம். ஏ.ஆர்.முருகதாஸ் தனது பாணியிலிருந்து சற்றே விலகி சமுதாய நோக்குடன் விவாசாயிகளின் சங்கடங்களை ஓங்கி ஒழிக்க செய்தார். விஜய் என்னும் மூன்றெழுத்து மந்திரம் கத்தி படத்தின் கருத்தை அடித்தட்டு மக்கள் வரை கொண்டு சென்றது.
advertisement
விஜய் என்றாலே நாலு சண்டை காட்சி, ஐந்து பாடல் காட்சி, கொஞ்சம் காதல் என கமர்சியல் படம் மட்டும் தான் கொடுப்பார் என்ற எண்ணத்தை அறவே துடைத்தெறிந்தார். படம் விவாசாயிகள் சம்பத்தப்பட்ட கருத்தை சொல்லவே, அனைத்து தரப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் கத்தி என்கிற கதிரேசன்.
கதாநாயகனின் பெயரை சுருக்கி கத்தி என்று தலைப்பு வைத்து விட்டார்கள் என்று தான் பலருக்கும் தெரியும். அதுவும் ஒப்புகொள்ள கூடிய உண்மைதான். என்றாலும், விவசாயிகள் கதிர் அறுக்க பயன்படுத்தும் அரிவாளை கத்தி என்றே அழைப்பார்கள்.
கதாநாயகனின் பெயரும் எதோ ஒரு பெயர் வைக்க வேண்டும் என்று வைக்கப்படவில்லை. கதிரேசன் என்றால் கதிருக்கு அரசன் என்று பொருள்படும் கதிர் என்றால் நெற்கதிர்.
அந்த நெற்கதிருக்கு அரசன் தான் தண்ணீர். படத்தின் கருவிற்கும் கதாபாத்திரத்தின் பெயருக்குமான ஆழமான தொடர்பை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இன்னொரு பாத்திரத்தின் பெயர் ஜீவானந்தம், இதுவும் கம்யூனிஸ்ட் தலைவர் ஒருவரின் பெயர் தான். மேலும், கத்தி படத்தில் கதாநாயகியே தேவையில்லை என்று நடிகர் விஜய் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார். ஆனால், படத்தின் கருத்தை மட்டும் கூறுகிறேன் என்று ஒரு டாக்குமென்டரி படம் போல் ஆக்கிவிட வேண்டாம் என்றும், கதாநாயகி இல்லை என்றால் படத்தின் வசூலுக்கும் பாதிப்பு வரலாம் என்று எண்ணியே, பிறகு வலுக்கட்டாயமாக கதாநாயகியை படத்தில் சேர்த்திருகிறார்கள்.
ஆயிரம் ஆக்ஷன் படங்கள், த்ரில்லர், ரொமான்ஸ், பேய் படங்கள் என்ற தமிழ் சினிமா பாணியில் இருந்து சற்றே விலகி மக்கள் மனதில் பாய்ந்தது இந்த “கத்தி”.
நம்முடையே பேரன், பேத்திகள் காலத்தில் ஏதாவது ஒருநாள், இதை தான் விஜய் அப்பவே கத்தி படத்துல சொன்னாரு என்று நிச்சயம் பேசுவார்கள். ஏனென்றால், தண்ணீர் பற்றிய கருத்தை ஏற்றுகொண்ட நாம், அதை சேமிக்கும் பணியில் இருந்து தவறி நிற்கிறோம். நான் சேமிக்கும் ஒவ்வொரு துளி நீரும், நம்முடைய பேரன் பேத்திகளுக்குத்தான் என்று சுயநலாமாக சிந்தித்தால் கூட வரப்போகும் பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
Summary in English : An Secret behind Vijay’s Kaththi movie.
0 comments:
Post a Comment