ஜன.,30-ல் ‛பத்ரிநாத் கி துல்கன்யா' டீசர் ரிலீஸ்
27 ஜன,2017 - 13:50 IST
வருண் தவான், ஆலியாபட் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛பத்ரிநாத் கி துல்கனியா'. சஷாங் கைத்தான் இயக்கி வரும் இப்படத்தை தர்மா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் கரண் ஜோகர் தயாரிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடக்கிறது. ஹம்டி சர்மா கி துல்கன்யா படத்தின் அடுத்தபாகமாக இப்படம் உருவாகி வருகிறது. சிங்கப்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் நடந்துள்ளது. மார்ச் மாதம் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு முன்பாக படத்தின் டீசரை இம்மாதம் வெளியிட உள்ளனர். அதன்படி ‛பத்ரிநாத் கி துல்கன்யா' டீசர் வருகிற ஜன., 30-ம் தேதி, காலை 11 மணியளவில் ரிலீஸாக உள்ளது.
0 comments:
Post a Comment