ரசிகருக்கு ஜெயராம் மகன் கொடுத்த பதிலடி..!
25 ஜன,2017 - 16:15 IST
நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் சினிமாவில் ஹீரோவாக நுழைந்து ஒரு படமும் வெளியாகிவிட்டது.. தமிழில் அவர் முதன்முதலாக அறிமுகமான ஒருபக்க கதை இன்னும் விடுகதையாகவே இருக்கிறது.. அதேசமயம் மலையாளத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். காளிதாசிடம் உள்ள ஒரு குணம் என்னவென்றால் பெரும்பாலான விழாக்களில் கலந்துகொள்ளும்போது அவரது தந்தை ஜெயராமுடனேயே கலந்துகொள்வார்..
கபாலி படம் அதிகாலை காட்சி பார்ப்பதற்கு கூட அவரது அப்பாவும் மகனுமாகத்தானே வந்தார்கள். பொதுவாக நடிகைகளுக்குத்தான் அவர்களது அம்மாக்கள் கூடவே வருவது வழக்கம். ஆனால் ஒரு ஹீரோவுக்கு இப்படி அப்பா கூடவே வருவதை, சமீபத்தில் லைவ் சாட்டிங்கில் ஒரு ரசிகர் “நீங்கள் ஏன் உங்கள் அப்பாவுடனேயே நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறீர்கள் என கேட்டுள்ளார்.. காளிதாசும் ரொம்பவே கூலாக “ஏனென்றால் அவர் என் அப்பா.. அதனால் தான்” என பதில் கொடுத்து ரசிகரின் வாயை அடைத்து விட்டார்.
0 comments:
Post a Comment