`மஞ்சப்பை’ இயக்குநர் ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள `கடம்பன்’ படம் திரைக்கு வர உள்ளது. முழுக்க முழுக்க காடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் காட்டுவாசியாக நடித்துள்ள ஆர்யா இப்படத்திற்காக 91 கிலோ வரை உடல் எடையை அதிகரித்தார்.
`கடம்பன்’ படத்தை தொடர்ந்து ஆர்யா அமீர் நடிப்பில் `சந்தனத்தேவன்’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், ஜல்லிக்கட்டை மையாக வைத்து எடுக்கப்படவுள்ள `சந்தனத்தேவன்’ படத்திற்காக ஆர்யா தனது உடல் எடையை குறைத்து வருகிறார்.
பின்னர், சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள `சங்கமித்ரா’ படத்தில் நடிக்க உள்ள ஆர்யா இப்படத்திற்காக மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்க உள்ள இப்படத்திற்காக ஆர்யா மீண்டும் உடல் எடையை அதிகரிக்க உள்ளாராம். அதாவது `கடம்பன்’ படத்தில் இருப்பதைவிட உடல் எடையை மேலும் அதிகரித்து ஹல்க் தோற்றத்திற்கு மாறச் சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் சுந்தர்.சி. இப்படத்திற்கான படப்பிடிப்பு 2017 பிற்பாதியில் தொடங்க உள்ளது.
மேலும் இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து ஜெயம் ரவியும் நடிக்க உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். `பஜ்ரோ மஸ்தானி’ பட புகழ் சுதீப் சட்டர்ஜி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
0 comments:
Post a Comment