Thursday, January 26, 2017

மாதவன் - சாய் பல்லவி படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


மாதவன் - சாய் பல்லவி படம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு



26 ஜன,2017 - 15:17 IST






எழுத்தின் அளவு:








தேவி படத்திற்கு பிறகு விஜய் இயக்கும் அடுத்த படத்தில் மாதவன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரேமம் நாயகி சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்தின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறர். லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். கலை இயக்குனராக ஜெயஸ்ரீ பணியாற்ற இருக்கிறார். இதனை பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான பிரமோத் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

"1958ஆம் ஆண்டு முதல் இன்று வரை இந்தி திரையுலகின் மதிப்பிற்குரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் எங்களின் பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம், தற்போது முதல் முறையாக தமிழ் திரையுலகில் தலைசிறந்த நட்சத்திர கூட்டணியோடு கால்பதிக்க இருப்பது, மிகவும் பெருமையாக இருக்கின்றது. மாதவன் மற்றும் சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு பொருத்தம், நிச்சயமாக தமிழக ரசிகர்களால் பெரிதளவில் வரவேற்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. படப்பிடிப்பை ஊட்டி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் தொடங்க இருக்கின்றோம்" இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment