Wednesday, January 25, 2017

படப்பிடிப்பை பாதியில் விட்டு வெளியேறிய அஜய்


படப்பிடிப்பை பாதியில் விட்டு வெளியேறிய அஜய்



25 ஜன,2017 - 14:39 IST






எழுத்தின் அளவு:








சிவாய் படத்திற்கு பிறகு இருக்குநர் மிலன் லூதிரா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடித்து வரும் படம் ‛பாத்சாகோ. இதன்படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடந்து வந்த நிலையில் திடீரென அஜய், ஷூட்டிங்கை பாதியில் விட்டுவிட்டு அவசர அவசரமாக மும்பை திரும்பினார். இதுப்பற்றி விசாரித்தபோது... அஜய்யின் அம்மாவிற்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய் உள்ளது. மார்பில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக அவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தான் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம் சொல்லிவிட்டு வேகமாக மும்பை கிளம்பி வந்திருக்கிறார் அஜய். தற்போது அஜய்யின் தாயாரின் உடல்நிலை நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

பாத்சாகோ படம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது.


0 comments:

Post a Comment