Tuesday, January 24, 2017

‘தமிழக அரசை குறை சொல்லாதீர்கள்…’ கமல் ஓபன் டாக்

kamal hassanஜல்லிக்கட்டு போராட்டம், போலீஸ் தடியடி உள்ளிட்டவைகளை பற்றி தன் கருத்தை தெரிவிக்க தற்போது கமல் பத்திரிகையாளர்கள் சந்தித்து வருகிறார்.


அப்போது அவர் பேசியதாவது….


நம் இளைஞர்கள், மாணவர்கள் அறவழியில் போராட்டங்களை நடத்தினார்கள்.


அவர்களுக்கு தலைவன் இல்லை. ஆனால் அவர்களின் நோக்கம் ஒரே குரல்தான். அது ஒரே குரலாக ஒலித்தாலே போதும்.


சிலர் இன்றும் (ஜனவரி 24, 2017) மெரினாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கலாம்.


அதற்காக அவர்களை சதிகாரர்கள், விஷமிகள் என கேவலப்படுத்தாதீர்கள்.


அதுபோல் தமிழக அரசும் தன்னால் முயன்ற அனைத்தையும் செய்துள்ளனர்.


இன்னும் சிறப்பாக அவர்கள் செய்திருந்தால் சந்தோஷம்.


அதற்காக அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என கூறை சொல்லாதீர்கள்.


வன்முறையில் ஈடுபட்ட போலீஸாரின் காட்சிகளை பார்த்த போது, இது காவல்துறையாக இருக்காது என்றே நம்பினேன்.


என்னைப்போல் சில நடிகர்களாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன். அவர்கள் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்.


இது தொடர்பாக விளக்கம் வரும் என நம்புகிறேன்.


இது சாதாரண மனிதனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கும். எப்போது வேண்டுமானாலும், நாம் அவர்களால் பாதிக்கப்படக்கூடும் என பயம் கொள்வான்” என்று பேசினார்.


மேலும் சபாஷ் நாயுடு சூட்டிங்கில் விரைவில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்தார்.

0 comments:

Post a Comment