Monday, January 30, 2017

படப்பிடிப்பு தளத்தில் பாடல் எழுத வைத்த விஜய்ஆண்டனி!


படப்பிடிப்பு தளத்தில் பாடல் எழுத வைத்த விஜய்ஆண்டனி!



31 ஜன,2017 - 09:04 IST






எழுத்தின் அளவு:








சைத்தான் படத்தை அடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் எமன். இந்த படத்தை ஏற்கனவே அவர் நடித்த நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்கியிருக்கிறார். மியாஜார்ஜ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக மம்பட்டியான் தியாகராஜன் நடித்துள்ளார். பிச்சைக்காரனுக்குப்பிறகு கமர்சியல் ஹீரோ வட்டத்திற்குள் வந்து விட்ட விஜய் ஆண்டனி இந்த படத்தில் விஜய், அஜீத் நடிப்பது போன்ற மாஸ் ஹீரோ கதையில் அதாவது ஊழல் அரசியல்வாதிகளை வதம் செய்யும் வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதோடு பிச்சைக்காரன் ஹிட் காரணமாக அதிக பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்த படத்தில் ஒவ்வொரு விசயங்களிலுமே அதிகப்படியான கவனம் செலுத்தி வரும் விஜய் ஆண்டனி, பாடல்களுக்குரிய டியூன்களை ரெடி பண்ணிய பிறகு, பாடலாசிரியர்களை எமன் படப்பிடிப்பு நடந்த லொகேசனுக்கே வரவைத்து, அங்குள்ள சூழலை கவனித்தபடி எழுத வைத்திருக்கிறார். அதனால் இந்த படத்தில் பாடல் வரிகள் ரொம்ப இயல்பாக அமைந்திருக்கிறதாம். கூடவே, ஹீரோ, வில்லன் என ஒவ்வொரு முக்கியமான கேரக்டர்களுக்கும் புதிய இசைக்கருவிகளைக்கொண்டு புதுமையான பின்னணி இசை கொடுக்கிறாராம் விஜய் ஆண்டனி.


0 comments:

Post a Comment