மூன்று ஹீரோயின்களுடன் பிப்.,2 முதல் ‛விஜய்61' படம் ஆரம்பம்
26 ஜன,2017 - 17:48 IST
பொங்கலுக்கு வெளிவந்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்து திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் தற்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது பைரவா. இந்த படத்தைத் தொடர்ந்து ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார் என்பது தெரிந்த விஷயம்தான். தெறி படத்தின் சூப்பர்ஹிட் வெற்றியால் விஜய் - அட்லி கூட்டணியை வைத்து படம் தயாரிக்கிறது தேனாண்டாள் பிலிம்ஸ்.
விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா ஆகியோருடன் ஜோதிகாவும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார். பிப்ரவரி 2-ம் தேதி முதல் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகிறது. தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது. ஆக்ஷ்ன் படமாக உருவாவதால் இப்படத்துக்காக, தற்போது முறுக்கு மீசை, தாடியுடன் வலம் வருகிறார் விஜய். தெறி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைவதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.
0 comments:
Post a Comment