Friday, January 27, 2017

ஜாக்கிசான் சவாரி செய்த சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்..!


ஜாக்கிசான் சவாரி செய்த சைக்கிள் 10 லட்சத்துக்கு ஏலம்..!



27 ஜன,2017 - 17:12 IST






எழுத்தின் அளவு:








தான் நடித்த படத்தை இங்கே உள்ளூரில் உள்ள 'தலை'யாய நடிகர்களே புரமோட் பண்ண மறுக்கிறார்கள். ஆனால் ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசானோ தான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள 'குங்பூ யோகா படத்தின் ப்ரமோஷன் வேலைகளுக்காக பல ஆயிரம் மைல்கள் பறந்து இந்தியா வந்துள்ளார். பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் கபில் ஷர்மா நடத்தும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று தனது படத்தின் புரமோஷன் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்தப்படத்தில் பாலிவுட் வில்லன் நடிகர் சோனு சூட் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.. சொல்லப்போனால் இந்தியா வந்துள்ள ஜாக்கி சானுக்கு சோனு சூட் தான் எங்கு போனாலும் கம்பெனி கொடுத்து வருகிறார்.. அப்படித்தான் இருவரும் சமீபத்தில் ஒரு சைக்கிளில் டபுள்ஸ் அடித்தார்கள்.. ஜாக்கிசான் பின்னாடி அமர்ந்துகொள்ள சோனு சூட் சைக்கிளை ஓட்டினார். இந்த விஷயம் வைரலாக பரவவே, கபில் ஷர்மா நிகழ்ச்சியில் அந்த சைக்கிள் ஏலம் விடப்பட்டது. இதை ஜாக்கி சானின் ரசிகர் ஒருவர் பத்து லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளாராம்.

'குங்பூ யோகா படத்தை சீனாவின் ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். இப்படம் சீனாவில் நாளையும் (ஜன-29), இந்தியாவில் பிப்-3-ம் தேதியும் வெளியாக உள்ளது. தமிழில் வெளியான 'அனேகன்' படத்தில் கதாநாயகியாக தோன்றிய அமைரா தஸ்துர் ஜாக்கி சானுடன் இணைந்து 'குங்பூ யோகா' படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment