சஞ்சய் தத் படம் ஆவணப்படம் இல்லை : ரன்பீர் கபூர்
27 ஜன,2017 - 16:31 IST
நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை சினிமாவாக உருவாகி வருகிறது. சஞ்சய்யாக ரன்பீர் நடிக்க, சஞ்சய்யின் நண்பரும், இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத்தின் படத்தை பற்றி பேசினார். அவர் பேசுகையில்... ‛‛சஞ்சய் தத்தின் வாழ்கை பற்றி நாங்கள் இயக்கும் படம் ஆவணப்படம் இல்லை. அவரின் வாழ்கையில் இருந்து நிறைய விசயங்களை நாம் கற்று கொள்ளலாம். சஞ்சய் வாழ்க்கையில் நிகழ்ந்த அப்பா மகன் இடையே இருக்கும் பாசம், நண்பர்களிடத்தில் அவர் கொண்ட நட்பு, வாழ்க்கையில் அவர் சந்தித்த துன்பம், இன்பம், சிறையில் அடைந்த வேதனை, திருமண வாழ்கையில் அவர் சந்தித்த கசப்பான அனுபவங்கள்... உள்ளிட்ட பல விஷயங்களை சொல்ல இருக்கிறோம்'' என்றார்.
சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தை, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
Advertisement
0 comments:
Post a Comment