ஓவியங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டும் மம்முட்டி மகள்..!
31 ஜன,2017 - 16:14 IST
எப்போதும் மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான், சில சமயங்களில் எப்போதாவது மம்முட்டியின் மனைவி சுல்பாத் என இவர்கள் மூவரை பற்றியே செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றனவே தவிர மம்முட்டியின் மகள் சுருமி பெரும்பாலும் மீடியா வெளிச்சத்திற்குள் வந்ததே இல்லை.. வர விரும்புவதும் இல்லை.. ஆனால் மம்முட்டியைப்போலவே உதவும் குணம் கொண்ட சுருமி இப்போது திடீரென மீடியாவின் பார்வைக்கு ஆளாகி இருக்கிறார்.. அதுவும் கூட மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு உதவி செய்ய முன்வந்த காரணத்தினால் தான்..
சுருமிக்கு கடந்த 2004ஆம் ஆண்டே திருமணம் நடைபெற்றது... சுருமியின் கணவர் ஒரு டாக்டர்.. சுருமிக்கு சிறுவயதில் இருந்தே ஓவியம் வரையும் திறமை இயற்கையாகவே கைவந்த கலையாக இருந்தது அதை ஊக்குவிக்கும் விதமாக தான் எந்த நாட்டுக்கு சென்றாலும் அங்கிருந்து ஓவியம் வரைவதற்கு தேவையான சாதனங்களை வாங்கிவந்து மகளுக்கு கொடுப்பாராம் மம்முட்டி. அதன் விளைவாக பள்ளிகளிலும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை அள்ளிவந்தார் சுருமி..
அந்த ஓவிய திறமைதான் அவருக்கு சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இடமும் வாங்கி தந்தது.. பின் லண்டனுக்கு சென்று ஓவியத்தில் மேல்படிப்பும் படித்துவந்தார் சுருமி. திருமணமான பின் தனது தந்தை, கணவர் ஆகியோரை பங்குதாரராக கொண்டு 'வாஸ்' என்கிற என்கிற அமைப்பை உருவாக்கி சமூக சேவைகளை செய்து வருகிறார்.. இதுவரை தான் வரைந்த ஓவியங்களை எல்லாம் இந்த அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற இருக்கும் ஓவியக்கண்காட்சிகளில் விற்று அதன்மூலம் கிடைக்கும் தொகையை மருத்துவ சிகிச்சை பெற வசதியில்லாத நோயாளிகளுக்கு உதவும் விதமாக வழங்க இருக்கிறாராம் சுருமி.
0 comments:
Post a Comment