வில்லனாக மாறும் ஜூனியர் என்.டி.ஆர்
26 ஜன,2017 - 11:00 IST
டோலிவுட்டின் யங் டைகர் ஜூனியர் என்.டி.ஆர், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடித்த ஜனதா கேரேஜ் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜெய் லவகுச எனும் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் பாபி இயக்கும் இப்படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரரும் நடிகருமான கல்யாண் ராம் தனது என்.டி.ஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வேடங்களில் நடிப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது. அதில் ஒன்று வில்லன் வேடம் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஹீரோ, வில்லன் என இரு வேடங்களிலும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருகின்றாராம். இப்படத்தில் நடிக்கவிருக்கும் நாயகி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஜூனியர் என்.டி.ஆருடன் குத்தாட்டம் போட ராய் லக்ஷ்மியை இயக்குனர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
0 comments:
Post a Comment