Saturday, January 28, 2017

நட்டி நடிக்கும் 'கெட்ட பையன் சார் இவன்'


நட்டி நடிக்கும் 'கெட்ட பையன் சார் இவன்'



28 ஜன,2017 - 17:32 IST






எழுத்தின் அளவு:








நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்த சதுரஙக வேட்டை படம் வெற்றியடைந்ததால் அவருக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அவர் நடித்த 'எங்கிட்ட மோதாதே' படத்தை முன்னணி ஹிந்திப்பட தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் தயாரிக்கிறது. இது தவிர 'போங்கு' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களுமே விரைவில் அடுத்தடுத்து ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'கெட்ட பையன் சார் இவன்' என்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நட்டி நட்ராஜ்! அறிமுக இயக்குனர் தீபக் இயக்கும் இந்தப்படத்தில் நட்டி நட்ராஜ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

'6 FACE STUDIOS' என்ற புதிய பட நிறுவனம் தங்களது முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. சதுரங்க வேட்டை படத்தின் வெற்றியின் காரணமாக ஒரு கோடி சம்பளம் கேட்கிறாராம் நட்டி. கெட்ட பையன்சார் இவன் படத்தின் தயாரிப்பாளர் நட்டி கேட்ட சம்பளத்தைக் கொடுக்க முன் வந்ததால்தான் உடனடி கால்ஷீட் கிடைத்ததாம்.


0 comments:

Post a Comment