என்னையும் கைது செய்யுங்கள் சிலிர்க்கும் சிம்பு :
29 ஜன,2017 - 14:49 IST
தமிழகத்தில் ஜல்லிக்கட்டிற்கு திரைத்துறையில் உள்ளவர்களும் , மாணவர்களும் ,பொது மக்களும் ஆதரவு குரல் கொடுத்தும் ,போராட்டங்கள் நடத்தியும் வந்தனர் . போராட்டத்தில் நடிகர் சிம்புவும் பங்கேற்றார். போராட்டத்திற்காக சிம்பு தனது தரப்பில் இருந்து எல்லா உதவியும் செய்து வந்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்காக தனது வீட்டின் அருகே உண்ணாவிரதம் இருந்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தினார். போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்காக நடிகர் சிம்பு இன்று சென்னையில் பேட்டியளித்தார்.
சிம்பு கூறியதாவது...."போராட்டத்தை மதத்தின் பேரில் திசை திருப்புவதை நான் ஒப்பு கொள்ள மாட்டேன் .மாணவர்களின் போராட்டம் வன்முறையில் முடிந்தது வருத்தம் அளிக்கிறது . போராட்டத்தை முடித்து கொள்ள போலீசார் போதிய அவகாசம் அளிக்கவில்லை. போராட்டத்தில் நடந்த வன்முறைக்கும் மீனவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எந்த காரணமும் இல்லாமல் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்தவர்களை விடுவிக்கவில்லை எனில் என்னையும் கைது செய்யுங்கள். போராட்டத்தின் வெற்றியை கொண்டாட அனுமதித்திருக்க வேண்டும். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவிட்டால் நான் அகிம்சை வழியில் போராடுவேன் " என்றார்.
0 comments:
Post a Comment