Thursday, January 26, 2017

ஜல்லிக்கட்டு ஆதரவு, மகேஷ்பாபு ஒரு 'துரோகி' - வம்புக்கிழுக்கும் ராம்கோபால் வர்மா


ஜல்லிக்கட்டு ஆதரவு, மகேஷ்பாபு ஒரு 'துரோகி' - வம்புக்கிழுக்கும் ராம்கோபால் வர்மா



26 ஜன,2017 - 11:52 IST






எழுத்தின் அளவு:








தமிழ்நாட்டு மக்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு அளித்த மற்ற மொழி நடிகர்களை அந்தந்த மாநிலத்தில் உள்ளவர்கள் குறை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளித்த மலையாள நடிகர்கள் மம்முட்டி, நிவின் பாலி, ஜெயராம், வினித் சீனிவாசன் ஆகியோரை மலையாள மக்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து இப்போது தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு, ஜல்லிக்கட்டு ஆதரவு அளித்து விட்டு, ஆந்திர மக்கள் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து இன்று நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் இருப்பது தவறு என ராம்கோபால் வர்மா விமர்சித்துள்ளார்.

வழக்கம் போல் இரவில் மட்டுமே மற்றவர்களை வம்புக்கிழுக்கும் ராம்கோபால் வர்மா நேற்று நள்ளிரவில் இது பற்றி தொடர்ந்து டிவீட்டியுள்ளார். அதில் மகேஷ்பாபுவை 'துரோகி' என விமர்சித்துள்ளார்.

“மற்ற ஹீரோக்கள் திரைப்படத்தில் வரும் போலீஸ், அரசியல்வாதிகளை மட்டுமே எதிர்த்து போராடுவார்கள். ஆனால், பவன் கல்யாண் மட்டுமே நிஜ வாழ்வில் இருக்கும் வில்லன்களான போலீஸ், அரசியல்வாதிகளை எதிர்த்துப் போராடுகிறார்.

ஸ்டலோன், ஷ்வார்ஸ்நேகர், ப்ரூஸ் லீ ஆகிய சிறந்த ஹீரோக்கள் கூட சாதாரணமாகத்தான் போராடினார்கள். ஆனால், பவன் கல்யாண் அரசாங்கத்துடனே போராடுகிறார்.

ஆந்திர மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவு கொடுப்பதை விட ஏன் தமிழ் கலாச்சாரத்திற்காக மகேஷ் பாபு ஆதரவு கொடுத்தார். ஏனென்றால் அவர் பவன் கல்யாண் போல அக்கறை உள்ளவர் கிடையாது.

அவரை சூப்பர் ஸ்டார் ஆக்கிய உண்மையான மக்களின் வாழ்வாதாரத்திற்குக் குரல் கொடுப்பதை விட அவருக்கு டப்பிங் மார்க்கெட்தான் முக்கியமாகத் தெரியவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

பவன் கல்யாணுக்கும், அவரது போராட்டத்திற்கும் உடனடியாக ஆதரவு கொடுக்காத பிரபலங்கள் ஆந்திர மாநிலத்தின் கிரிமினல் துரோகிகள் ஆவார்கள்.

மகேஷ்பாவுவின் ரசிகர்கள் பவன் கல்யாணின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென சொல்லவில்லை என்றால் அவர்களும், அவரைப் போன்றே ஆந்திர மாநிலத்தின் பெரிய துரோகிகள்தான்.

மகேஷ் பாபு அரசியலில் ஈடுபடுவது இல்லை என்று சொன்னால் தமிழ் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் அவர் ஏன் வருத்தப்பட வேண்டும். ஆந்திர மாநில பிரச்சனைகளுக்காகப் போராடும் பவன் கல்யாணுக்காக ஏன் வருத்தப்படவில்லை,” எனக் கேட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து படித்து வளர்ந்த மகேஷ் பாபு அந்த உணர்வுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், அவரைப் பற்றி மிகவும் கிண்டலாகவும், கேலியாகவும் ராம்கோபால் வர்மா கருத்துக்களை வெளியிட்டுள்ளது மகேஷ் பாபு ரசிகர்களை கொதிப்படைய வைத்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் தொடர்ந்து விமர்சித்து வரும் ராம் கோபால் வர்மா மீது தமிழ் இளைஞர்களும் கடும் கோபத்துடன் பதிலடி கொடுத்து வருகின்றனர். ராம்கோபால் வர்மாவின் பல தெலுங்கு, ஹிந்திப் படங்கள் தமிழில் டப்பிங் செய்து, தமிழ் மக்கள் மூலமும் அவர் வருமானத்தையும், புகழையும் பெற்றுள்ளார் என்பதை மறந்து அவர் டிவீட் போட்டு வருவது நியாயமானதே அல்ல.


0 comments:

Post a Comment