சிம்பு, தனுஷின் நட்பை சொல்லும் படம்! - நடிகர் விஜய லோகேஷ்
30 ஜன,2017 - 13:18 IST
இதயம் கதிர் உள்பட பலரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய என்.டி.ரவிச்சந்திரன் இயக்கி வரும் படம் காதலில் சிம்புவும் தனுசும். சிம்பு-தனுஷ் இருவரும் போட்டியாளர்களாக சித்தரிக்கப்பட்டபோதும், நிஜத்தில் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை சொல்லும் படம் இது. காதல், காமெடி, நட்பு கலந்த கதையில் உருவாகும் இப்படத்தில் சிம்பு, தனுஷின் நிஜ ரசிகர்களே அவர்களது கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படம் குறித்து தனுஷ் ரசிகராக நடிக்கும் விஜயலோகேஷ் கூறுகையில், இந்த படம் சிம்பு-தனுஷ் ரசிகர்களுக்கு நல்லதொரு தீனியாக இருக்கும். அவர்கள் இருவரையும் பற்றிய பாசிட்டீவான விசயங்கள் மட்டுமே இந்த படத்தில் உள்ளது. குறிப்பாக, திரைக்குப்பின்னால் அவர்களது நட்பின் ஆழத்தை சொல்லும் படம் இது. இந்த படத்தில் தனுஷ் ஆடுகளம் படத்தில் பேசிய கொன்டே புடுவேன் என்ற டயலாக் போன்று அவர்கள் சில படங்களில் பேசிய டயலாக்கு கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது.
அதேபோல், சிம்பு பாடும் கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன் என்ற பாடலை இப்படத்தில் பஞ்ச் டயலாக்கி விட்டார் இயக்குனர். இதேபோல் சிம்பு பேசிய நடித்த பல டயலாக்குகள் இந்த படத்தில் உள்ளது. அதோடு, இதில் தனுஷ் ரோலில் நடிக்கும் நானும், சிம்பு ரோலில் நடிக்கும் காமேசும் நிஜத்திலும் அவர்களது ரசிகர்கள்தான். அதனால் அவர்களது மேனரிசத்தை உள்வாங்கி நடித்திருக்கிறோம். அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த படமும் இருக்கும் என்கிறார் விஜய லோகேஷ்.
தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் காதலில் சிம்புவும் தனுசும் படத்திற்கு வினித் ஒளிப்பதிவு செய்ய, ராஜா இசையமைக்கிறார். ஜாய்மதி நடனம் அமைத்துள்ள இந்த படத்திற்கு கில்லி சண்டை பயிற்சி கொடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment