Sunday, January 29, 2017

ரஜினி, கமலுடன் ஒப்பிடாதீர்கள் நான் சின்ன பையன் : சூர்யா வேண்டுகோள்


ரஜினி, கமலுடன் ஒப்பிடாதீர்கள் நான் சின்ன பையன் : சூர்யா வேண்டுகோள்



30 ஜன,2017 - 10:14 IST






எழுத்தின் அளவு:








சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் சி3, ஹரி இயக்கி உள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். ப்ரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 9ந் தேதி வெளிவருகிறது. இதையொட்டி சூர்யா அளித்த பேட்டி வருமாறு:

சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் ஆகின்றன. இதுவரை 35 படங்களில் நடித்துவிட்டேன். ஒரே இயக்குனருடன் 4 அல்லது 5 படங்களில் பணியாற்றுவது அரிது. ஆனால் டைரக்டர் ஹரியுடன் அது நடந்திருக்கிறது. சினிமாவில் அறிமுகமானபோது துரைசிங்கம் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பேன் என்றோ, எனக்காக அந்த கதாபாத்திரம் உருவாக்கப்படும் என்றோ நினைத்து பார்க்கவில்லை.

'சிங்கம்' படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. எனவே தான் இப்போது அதன் 3-ம் பாகத்தையும் உருவாக்கி உள்ளோம். இது முந்தைய படங்களை விட சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்துக்காக 120 நாட்கள் நடித்தேன். தினமும் குறைந்தபட்சம் 300 பேர் இந்தப் படத்திற்காக உழைத்தார்கள். படம் வருகிற 9ந் தேதி வெளிவருகிறது. என்றார் சூர்யா.

சூர்யா இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதால் ஜல்லிகட்டு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய வன்முறை பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சில இடங்களில் வருத்தப்படும்படியான அசம்பாவிதங்கள் நடந்திருக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. சில போலீசார் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த போலீசையும் குற்றம் சொல்ல முடியாது. ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதைத்தான் சிங்கம் படத்தில் சொல்கிறோம். என்றார்.

ரஜினி படத்திற்கு சமமாக படம் வியாபாரமாகியிருப்பது பற்றி கேட்டபோது "ரஜினி, கமலுடன் ஒப்பிடாதீர்கள் நான் சின்ன பையன்" என்றார்.


0 comments:

Post a Comment