Tuesday, January 31, 2017

கேரள திரைப்பட விழாவிற்கு செல்லும் 'மேற்குத் தொடர்ச்சி மலை'


கேரள திரைப்பட விழாவிற்கு செல்லும் 'மேற்குத் தொடர்ச்சி மலை'



31 ஜன,2017 - 15:48 IST






எழுத்தின் அளவு:








2010 ஆம் ஆண்டில் சீனுராமசாமி இயக்கிய 'தென்மேற்கு பருவக்காற்று' படம் மூலம் ஹீரோவான விஜய்சேதுபதி, மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோவாகிவிட்டார். கொஞ்சம் வளர்ந்ததும் தயாரிப்பாளராக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். 'விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்' என்ற படக் கம்பெனியையும் துவக்கிய விஜய்சேதுபதி 'மேற்குத் தொடர்ச்சி மலை' என்ற படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார்.

என்ன காரணத்தினாலோ மேற்குத் தொடர்ச்சி மலை படம் ஒரு கட்டத்தில் ட்ராப்பானது. அதன்பிறகு தன்னுடைய 'விஜய்சேதுபதி புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்தின் 2வது படைப்பாக 'ஆரஞ்சு மிட்டாய்' என்ற படத்தைத் தயாரித்தார். அந்தப் படத்தினால் விஜய்சேதுபதிக்கு சில கோடிகள் நஷ்டமானது.

இந்நிலையில் ஏற்கனவே கிடப்பில் போடப்பட்ட 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தை தூசுதட்டி எடுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கினார். லெனின் பாரதி இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் ஏற்கெனவே கேரள சர்வதேச திரைப்பட விழாவிலும், பஞ்சாபில் நடைபெற்ற பிரோஸ்கோப் குளோபல் ஃபிலிம் பெஸ்டிவலிலும் கலந்து கொண்டு பாராட்டுக்களைக் குவித்தது.

தற்போது, மேலும் ஒரு சர்வதேச திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்கு இப்படம் தேர்வாகியுள்ளது. கேரளாவில் உள்ள திருச்சூரில் வரும் 3ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் 'அறிமுக படம்' என்ற பிரிவில் திரையிடப்படுவதற்கு 'மேற்குத் தொடர்ச்சி மலை' படம் தேர்வாகியுள்ளது. இதுபோன்ற பட விழாக்களில் கிடைக்கும் பெருமையை வைத்து 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தை வியாபாரம் செய்துவிடலாம் என்று நம்புகிறாராம் விஜய்சேதுபதி.


0 comments:

Post a Comment