Saturday, January 28, 2017

பாலிவுட்இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலுக்கு அடிஉதை: படப்பிடிப்பில்சம்பவம்


பாலிவுட்இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலுக்கு அடிஉதை: படப்பிடிப்பில்சம்பவம்



29 ஜன,2017 - 08:38 IST






எழுத்தின் அளவு:








பாலிவுட் இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலியை கர்னி சேனா என்ற அமைப்பினர் திடீரென புகுந்து தாக்கினர்.பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, ராஜஸ்தானின் சித்தூர்கார் பகுதியை ஆண்ட ராணி பத்மினி கதையை மையமாக வைத்து பத்மாவதி என்ற படம் இயக்கி வந்தார்..

ரன்வீர் சிங்,தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நேற்று இதன் படபிடிப்பு சித்தூர்கர் கோட்டையில் நடந்தது. அப்போது கர்னிசேனா என்ற அமைப்பினர் படபிடிப்பு தளத்திற்குள் நுழைந்து இயக்குனர் பன்சாலை சரமாரியாக தாக்கி ஆடை கிழித்து காயப்படுத்தினர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தனது குழுவுடன் மும்பை திரும்பினார்.


போலீசார்நடத்திய விசாரணையில், ராணி பத்மினி கதை வரலாற்றை திரித்து, ராணி பத்மினியை கில்ஜி வம்சத்தின் கொடுங்கோல் ஆட்சிசெய்த அலாவுதீன் கில்யுடன் தொடர்பு படுத்தி தவறான கருத்துடன் படம் இயக்குவதாக கூறி அவர்கள் தாக்கியது தெரியவந்தது.. இந்த தாக்குதலுக்கு இந்தி திரையுலகம் கடும் கண்டனம் தெரிவித்ததுள்ளது.

பத்மாவதி படம் தவறாக சித்தரிக்கப்படவில்லை என பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மறுத்துள்ளார்.இயக்குனர் பன்சாலி தாக்கப்பட்டதற்கு மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுகண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள்மீது முதல்வர் வசுந்தரா ராஜே நடவடிக்கை எடுக்க வேண்டும்என வலியுறுத்தினார்.


0 comments:

Post a Comment