Sunday, January 29, 2017

'புலி முருகன்' முதல்நாள் வசூல் சாதனையை முறியடிக்க தயாராகும் மம்முட்டி படம்..!


'புலி முருகன்' முதல்நாள் வசூல் சாதனையை முறியடிக்க தயாராகும் மம்முட்டி படம்..!



29 ஜன,2017 - 16:18 IST






எழுத்தின் அளவு:








மம்முட்டியை வைத்து தனது ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மூலமாக 'தி கிரேட் பாதர்' என்கிற படத்தை தயாரித்துள்ளார் நடிகர் பிருத்விராஜ்... இந்தப்படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் மீண்டும் நுழைந்திருக்கிறார் சினேகா. அதுமட்டுமல்ல நடிகர் ஆர்யா இந்தப்படத்தில் வில்லனாக மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை ஹனீப் அதேனி என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்றே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப்படம் இப்போது மார்ச்-30ல் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

கிட்டத்தட்ட படத்தின் தொண்ணூறு சதவீத வேலைகள் முடிவடைந்துவிட்டாலும் இந்தப்படத்தின் ரிலீஸை தள்ளி வைத்த்திருப்பது ஏன் என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. அதற்கு காரணமும் இருக்கிறது.. சமீப நாட்களாக அவ்வப்போது .சீரான இடைவெளிகளில் இந்தப்படத்தில் மம்முட்டியின் அசத்தலான ஸ்டைலிஷான தொர்ற்றங்களை கொண்ட போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள்.. படத்தை பற்றிய செய்திகளையும் அவ்வப்போது கசியவிட்டு நாளுக்கு நாள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தும் வருகிறார்கள்.. இதன்மூலம் இதுவரை முதல்நாள் வசூலில் சாதனை படைத்துள்ள மோகன்லாலின் 'புலி முருகன்' படத்தின் வசூலை ஓவர்டேக் செய்யவேண்டும் என்பதுதான் படக்குழுவினரின் திட்டமாம்.. படமும் அதற்கேற்றபடி ஒர்த் ஆக உருவாகியுள்ளதாம்.


0 comments:

Post a Comment