Friday, January 27, 2017

மனங்கவர்ந்த சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர்!


மனங்கவர்ந்த சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர்!



27 ஜன,2017 - 08:25 IST






எழுத்தின் அளவு:








புதிய தலைமுறை சேனலில் 2011 முதல் 2014 வரை செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் லீடு ரோலில் நடிக்கத்தொடங்கினார். சில நடனம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்தார். இந்நிலையில், கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் பிரியா பவானி சங்கரின் நடிப்பு பெரிய அளவில் நேயர்களை கவர்ந்து வந்தது. அவரது நடிப்புக்காகவே அந்த சீரியலை ரசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டில் மனங்கவர்ந்த 25 நடிகைகளின் பட்டியல் ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெருவாரியான இடங்களை சினிமா நடிகைகளே கைப்பற்றியுள்ளனர். ஆனபோதும், 23-வது இடத்தை பிரியா பவானி சங்கர் கைப்பற்றியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டில் சீரியல் மூலம் அதிகப்படியான நேயர்களின் மனங்கவர்ந்த நடிகை என்ற அடிப்படையில் அவருக்கு இந்த இடம்கிடைத்துள்ளது.


0 comments:

Post a Comment