Thursday, January 26, 2017

எமன் அரசியல் கதை


எமன் அரசியல் கதை



26 ஜன,2017 - 15:37 IST






எழுத்தின் அளவு:








சைத்தான் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் எமன். மியா ஜார்ஜ் ஹீரோயின். விஜய் ஆண்டனியின் முதல் படமான நான் படத்தை இயக்கிய ஜீவா சங்கர் இயக்குகிறார். லைக்கா புரொடக்ஷனுடன் விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரிக்கிறது. ஹீரோ விஜய் ஆண்டனியே இசை அமைக்கிறார். இயக்குனர் ஜீவா சங்கரே ஒளிப்பதிவும் செய்கிறார். தியாகராஜன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இது தனுஷ் நடித்த கொடி மாதிரியான அரசியல் கதை. தாதாவா இருந்து அரசியலில் பெரிய இடத்தில் இருக்கும் தியாகராஜனின் கொட்டத்தை அடக்க அவரால் பாதிக்கப்பட்ட விஜய் ஆண்டனி அவர் பாணியிலேயே தாதாவாகி அரசியல்வாதியாகி அவருக்கு எமனாக வந்து நிற்கிற மாதிரியான கதை. முறுக்கு மீசை சின்ன தாடி என கொடியில் தனுஷ் வந்த அதே கெட் அப்பில் விஜய் ஆண்டனி வருகிறார். பொதுவாக அரசியல் படங்கள் மக்களின் பார்வையிலிருந்து அரசியலை பார்ப்பதாக இருக்கும். இந்தப் படத்தில் அரசியல்வாதிகளின் பார்வையிலிருந்து அரசியலை பார்க்கும் படமாக இருக்கும். என்கிறார்கள்.


0 comments:

Post a Comment