Wednesday, January 25, 2017

வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமின்


வேந்தர் மூவிஸ் மதனுக்கு நிபந்தனை ஜாமின்



25 ஜன,2017 - 17:57 IST






எழுத்தின் அளவு:








பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட வேந்தர் மூவிஸ் மதன், நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். வேந்தர் மூவிஸ் சார்பில் பல படங்களை விநியோகம் செய்தும், பல படங்களை தயாரித்தும் வந்தவர் மதன். சில மாதங்களுக்கு முன்னர், கங்கைக்கு செல்கிறேன், காசியில் சமாதியாகிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவானார். அதன்பின்னர் இவர் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகின. எஸ்ஆர்எம்., கல்வி நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த மதன், கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி பல மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த மதன், திருப்பூரில் கைதானார். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேசமயம், தனக்கு ஜாமின் கோரியும் மதன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மதனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.


0 comments:

Post a Comment