அந்த அளவுக்கு முட்டாளா நாங்கள்..? - கொதிக்கும் துல்கர் பட இயக்குனர்..!
28 ஜன,2017 - 14:20 IST
இதுவும் மலையாள திரையுலகம் சம்பந்தப்பட்ட, கதை சர்ச்சை பிரச்சனை தான்.. என்றாலும் கதை தொடர்பாக இரு படக்குழுவினருக்கும் எந்த பிரச்சனையும் வழக்கும் இல்லை.. சர்ச்சையை உருவாக்கியுள்ளது ரசிகர்கள் தான்.. குறிப்பாக சோஷியல் மீடியா விமர்சகர்கள் தான்.. விஷயம் இதுதான்.. சமீபத்தில் துல்கரின் நடிப்பில் 'ஜோமோன்டே சுவிசேஷங்கள்' என்கிற படம் ரிலீஸானது. பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கியுள்ள இந்தப்படத்தை பார்த்த பலரும் கடந்த வருடம் வெளியாகி நிவின்பாலி நடிப்பில் ஹிட்டான 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படத்தின் அப்பட்டமான சாயல் படத்தின் கதையிலும் காட்சிகளிலும் தெரிவதாக கருத்து கூறியுள்ளார்கள்.
இதுகுறித்து படத்தின் கதாசிரியர் இக்பால் குட்டிப்புரம் இரண்டு தினங்களுக்கு முன் விளக்கம் கொடுத்திருந்தார். அதில் தங்களது படத்தின் கதை ஷூட்டிங்ஸ்பாட்டில் படமாகிக்கொண்டு இருந்தபோதுதான் நிவின்பாலியின் படம் ரிலீஸானது என்றும், அந்தப்படத்தை தாங்கள் காப்பியடிக்கவில்லை என்பது இதிலிருந்தே தெரியும் என்று கூறினார்.. ஆனால் இப்போது படத்தின் இயக்குனர் சத்யன் அந்திகாடு இந்த சர்ச்சை தொடர்பாக வேறு ஒரு கருத்தை கூறியுள்ளார்..
“எங்கள் படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் முன்னரே 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்ஜியம்' படம் ரிலீஸாகிவிட்டது.. இன்னும் சொல்லப்போனால் அந்தப்படத்தை பார்த்தபின்னர் தான் நாங்கள் எங்கள் படப்பிடிப்பையே ஆரம்பித்தோம். அப்படி இருக்கையில் எங்களுக்கு தெரியாதா அந்தப்படத்தின் கதையும் எங்கள் படத்தின் கதையும் ஒன்றா இல்லையா என்று.?. அந்த அளவுக்கு முட்டாளா நாங்கள்..? இரண்டு படங்களின் மைய நூழிலையும் கடன் பிரச்சனையில் சிக்கிய கோடீஸ்வர தந்தை - அவரை மீட்கும் மகன் என்பது மட்டுமே உண்மை.. ஆனால் அவர்கள் அதற்கு கொடுத்திருந்த திரை வடிவம் வேறு.. நாங்கள் கொடுத்திருக்கும் திரை வடிவம் வேறு.. இதேபோன்ற கான்செப்ட்டில் இதற்கு முன்னும் ஏராளாமான படங்கள் வந்திருக்கின்றன” என கூறியுள்ளார் இயக்குனர் சத்யன் அந்திக்காடு.
0 comments:
Post a Comment