மலையாளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு கிடைத்த முதல் வெற்றி!
28 ஜன,2017 - 10:23 IST
தமிழில் காக்கா முட்டை படத்திற்கு பிறகு பேசப்படும் நடிகையானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். விஜயசேதுபதி, சிபிராஜ், விதார்த்,உதயநிதி, அருள்நிதி போன்ற ஹீரோக்களுடன் நடித்துள்ள அவர், நாயகி, இரண்டாவது நாயகி என பல படங்களில் நடித்து விட்டார். தற்போது அதர்வா நடித்து வரும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்திருப்பவர், மலையாளத்திலும் காலூன்றி விட்டார்.
அந்த வகையில், துல்கர் சல்மானுடன் அவர் நடித்த ஜோமொண்டே சுவிசேஷங்கள் என்ற படம் ஜனவரி 19-ந் தேதி கேரளாவில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதனால் மலையாளத்தில் நான் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்று உற்சாகத்துடன் கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். இதையடுத்து, பிரேமம் நிவின்பாலியுடன் ஷக்காவு -என்ற படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறேன். இந்த படத்திலும் நாயகி வேடம்தான். அதோடு, துல்கர்சல்மானுடன் நடித்த படம் ஹிட்டடித்ததைத் தொடர்ந்து சில டைரக்டர்கள் கதை சொல்லியிருக்கிறார்கள். அதனால் மலையாளத்தில் அழுத்தமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
0 comments:
Post a Comment