ரஜினி நடித்தால் நன்றாக இருக்கும் ; மோகன்லால் பட இயக்குனர் விருப்பம்..!
30 ஜன,2017 - 16:27 IST
பொதுவாக மலையாளத்தில் இருந்து ஒரு படம் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகிறது என்றால் அந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கை மட்டும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் தாங்களே விரும்பி இயக்குகிறார்கள். ஆனால் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளின் ரீமேக்கை வேறு இயக்குனர்கள் வசம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்கள்.. காரணம் தமிழ் ரசிகனின் நாடித்துடிப்பு மலையாள இயக்குனர்களுக்கு ரொம்பவே அத்துப்படி.. இப்படித்தான் சித்திக் (காவலன், பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா), ஜீத்து ஜோசப் (த்ரிஷ்யம்) ஆகியோர் தங்களது ஹிட் படங்களை தமிழிலும் ரீமேக் செய்து தமிழிலும் ஹிட் ஆக்கினர்..
அந்தவகையில் சமீபத்தில் வெளியான மோகன்லால் நடித்த 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்' படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது.. இதன் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே சொல்லியிருந்தோம்.. ஆனால் படத்தை இயக்குவது யார் என முடிவாகவில்லை. கன்னடத்தில் நடிகர், இயக்குனர் என இருவருமே முடிவாகவில்லை.. ஆனால் தமிழில் ஒரிஜினலை இயக்கியே ஜிபு ஜேக்கப்பே இயக்குவது உறுதியாகிவிட்டது.. “இந்தக்கதைக்கு ரஜினியும் மீனாவும் ரொம்பவே பொருத்தமாக இருப்பார்கள் என்பது என் கருத்து.. ஆனால் ரஜினி சம்மதிப்பாரா என்ன” என தனது ஏக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் ஜிபு ஜேக்கப்.
0 comments:
Post a Comment