நிக்கி கல்ராணிக்கு விக்ரம் பிரபு சிபாரிசு
27 ஜன,2017 - 14:42 IST
வீரசிவாஜி படத்தை அடுத்து விக்ரம்பிரபு நடிப்பில் அடுத்து வெளிவர விருக்கிறது 'சத்ரியன்' படம். முடிசூடா மன்னன் என்ற பெயரில் தயாரான இந்தப் படம் அந்த டைட்டில் கிடைக்காததினால் சத்ரியன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் எப்போதோ நடித்து முடித்துவிட்டார் விக்ரம் பிரபு.
சத்ரியன் படத்தின் ரிலீஸ் தேதிக்கு காத்திருக்காமல் தற்போது தனது சொந்த தயாரிப்பாக உருவாகி வரும் 'நெருப்புடா' படத்தில் நடித்து வருகிறார். அஷோக் குமார் என்ற புதுமுக இயக்குநர் இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து பக்கா என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு.
அறிமுக இயக்குனர் சூர்யா இயக்கும் பக்கா படத்திலும் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியே நடிக்கிறார். அவரை சிபாரிசு செய்தது வேறு யாருமில்லை... விக்ரம் பிரபுவேதான். பக்கா படம் நிக்கி கல்ராணியின் 25 - ஆவது படமாம். சத்ரியன் ரிலீஸ் ஆனதும் இந்த படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment