அமிதாப்புடன் மீண்டும் நடிக்க ஆசைப்படும் சத்ருஹன்
30 ஜன,2017 - 13:03 IST
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அமிதாப் பச்சன் மற்றும் சத்ருஹன் சின்ஹா. இருவரும் இணைந்து பல படங்களில் நடித்திருக்கிறார்கள். அமிதாப் இப்போது தனது வயதுக்கு ஏற்ற ரோலில் நடிக்கிறார், ஆனால் சத்ருஹன் சின்ஹா அரசியலுக்கு சென்றுவிட்டதால் சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அமிதாப்புடன் நடிக்க ஆசைப்படுவதாக சத்ருஹன் கூறியுள்ளார்.
இதுப்பற்றி அவர் கூறியிருப்பதாவது... "நானும், அமிதாப்பும் பல ஹிட் படங்களில் இணைந்து நடித்துள்ளோம். குறிப்பாக பாம்பே டூ கோவா, தோஸ்தானா, காலா பத்தர் ஆகிய படங்களில் இணைந்து நடித்தோம். எனக்கு இன்னும் எங்கள் முதல்பட ஷூட்டிங் நினைவில் இருக்கிறது. பாம்பே டூ கோவா படத்தின் படப்பிடிப்பில் அமிதாப் என் முகத்தில் ஓங்கி ஒரு குத்துவிட்டார். அதில் என் மூக்கு உடைந்ததுடன் ரத்தமும் நிற்காமல் போனது. ரத்தத்தை பார்த்ததும் அவர் பீதி அடைந்ததுடன், மிகவும் வருத்தம் அடைந்தார். யாராவது நாங்கள் மீண்டும் இணைந்து நடிப்பதற்கு நல்ல கதையாக இருந்தால் எழுதுங்கள், நடிக்கிறோம்" என்று கூறியுள்ளார் சத்ருஹன்.
0 comments:
Post a Comment