துருவங்கள் பதினாறு-ஐ காப்பி அடித்து பகடி ஆடவில்லை: இயக்குனர் விளக்கம்
28 ஜன,2017 - 14:46 IST
துருவங்கள் பதினாறு படத்திற்கு பிறகு ரகுமான் நடிக்கும் படம் பகடி ஆட்டம். இதிலும் அவர் இளைஞர்களை விசாரிக்கும் போலீஸ் அதிகரியாக நடிக்கிறார். படத்தின் புரமோசன்களும் துருவங்கள் பதினாறு சாயலிலேயே வெளியிடப்படுகிறது. துருவங்கள் பதினாறு வெற்றியை தொடர்ந்து அந்த சாயலில் பகடி ஆட்டம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராம்.கே.சந்திரன் கூறியதாவது:
"துருவங்கள் பதினாறு படத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இரண்டு படத்திலும் ரகுமான் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பதை தவிர வேறு ஒற்றுமை இல்லை. அது ஒரு க்ரைம் திரில்லர், இது சோஷியல் மெசேஜ் திரில்லர். இன்றைக்கு இருக்கும் சமூக வலைத்தளங்களை இளைஞர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள். அதன் மூலம் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதுதான் கதை. குறிப்பாக பெண்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள். என்பதை சொல்லும் படம். பெற்றவர்கள் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும். இளைஞர்களுக்கு எந்த அளவிற்கு குடும்ப பொறுப்பும் நாட்டு அக்கறையும் இருக்க வேண்டும் என்பதை சொல்கிற படம்.
ஆட்டோ ஓட்டும் பெண், ஒரு பணக்கார வாலிபன், ஒரு வேலையில்லா பட்டதாரி, போலீஸ் அதிகாரி ரகுமான் இந்த நால்வருக்கும் தனிதனி கதை இருக்கிறது, இவர்களின் கதை ஒரு இடத்தில் ஒன்றாக சேரும்போது படம் த்ரில்லராக மாறும், அதன்பிறகு பரபரவென ஓடி நிற்கும் திரைக்கதை. என்கிறார் ராம்.கே.சந்திரன்.
0 comments:
Post a Comment