ஜெய்ப்பூரை காலி செய்த பத்மாவதி படக்குழு
31 ஜன,2017 - 12:59 IST
பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி எனும் வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன்படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அருகே நடந்து வந்தது. இரு தினங்களுக்கு முன்னர் கர்னி ராஜ்புட் என்ற அமைப்பு, பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருப்பதாக கூறி படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்து அங்கிருந்த செட்டுகளை நாசம் செய்ததுடன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் கடுமையாக தாக்கியது. இதற்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய்ப்பூரில் கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, பத்மாவதி படக்குழுவினர் அங்கிருந்து மொத்தமாக காலி செய்துவிட்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் வேறு ஒரு தளத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, இயக்குநர் மற்றும் பத்மாவதி படப்பிடிப்பில் அத்துமீறி தாக்குதல் நடத்திய கர்னி அமைப்பு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பத்மாவதி படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார்.
0 comments:
Post a Comment