Sunday, January 29, 2017

பிளாஷ்பேக்: ரிக்ஷாக்காரர் சொன்ன கதைதான் பசி


பிளாஷ்பேக்: ரிக்ஷாக்காரர் சொன்ன கதைதான் பசி



30 ஜன,2017 - 12:08 IST






எழுத்தின் அளவு:








1979ம் ஆண்டு வெளிவந்த படம் பசி. தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் கமர்ஷியல் அல்லாத கலைப்படம். ஷோபாவுக்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம். டெல்லி கணேஷ், விஜயன், செந்தில், சத்யா, சுருளிராஜன் நடித்திருந்தனர். துரை இயக்கி, தயாரித்தார். இந்தப் படத்தின் கதை ஒரு ரிக்ஷாக்காரர் சொன்னது.

இயக்குனர் துரைக்கு ஒரு பழக்கம் இருந்தது. எந்தப் படத்திற்கு கதை எழுதினாலும் அந்த கதை நடக்கும் களத்திற்கு சென்று எழுதுவது வழக்கம். அவர் இயக்கிய அவளும் பெண்தானே படம் பாலியல் தொழிலாளி பற்றிய படம். இதற்காக அவர் பாலியல் தொழிலாளிகள் வாழ்ந்த பகுதியில் தங்கியிருந்து எழுதினார். அதேபோல சென்னையில் வாழும் கடைக்கோடி மக்களை பற்றிய கதை ஒன்றை தயார் செய்ய அவர்கள் வாழும் சேரிப் பகுதிக்கு சென்றார். ஒரு முறை மெரீனா பீச்சில் உள்ள சேரியல் நெடுநேரம் அமர்ந்து கதை யோசித்து நள்ளிரவில் விட்டு வீட்டுக்கு ஒரு ரிக்ஷாவில் பயணம் செய்தார்.

அந்த ரிக்ஷாக்காரர் ரிக்ஷா ஓட்டும் வலி தெரியாமல் இருக்க தனது கதையையும் தனது கஷ்டத்தையும் சொல்ல ஆரம்பித்தார். அதனை கவனமாக கேட்ட துரை, வீட்டுக்கு சென்றதும் அந்த ரிக்ஷாக்காரர் சொன்ன கதையை அப்படியே திரைக்கதையாக மாற்றினார். அதுதான் பசி படத்தின் கதை. படம் வெற்றி பெற்றதும். அந்த ரிக்ஷாக்காரரை தேடிப்பிடித்து அவருக்கு பணமுடிப்பு கொடுத்து வந்தார் துரை.


0 comments:

Post a Comment