இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல்
28 ஜன,2017 - 04:26 IST
ஜெய்ப்பூரில் பத்மாவதி படப்பிடிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பாஜிராவ் மஸ்தானி படத்தின் வெற்றிக்கு பிவ், சஞ்சை லீலா பன்சாலி இயக்கும் படம் பத்மாவதி. ரன்வீர் சிங், தீபிகா படுகானே நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அப்போது இதில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி சில அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, செட்டிற்குள் நுழைந்த சிலர் சஞ்சை லீலா பன்சாலியை கீழே தள்ளி அவர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. போராட்டக்காரர்களின் எதிர்ப்பால் அங்கு படப்பிடிப்பு நடத்தப்படாது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment