Sunday, January 29, 2017

பாலகிருஷ்ணாவின் அடுத்த பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ?


பாலகிருஷ்ணாவின் அடுத்த பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ?



29 ஜன,2017 - 14:54 IST






எழுத்தின் அளவு:








தெலுங்குத் திரையுலகின் அதிரடி நடிகரான பாலகிருஷ்ணாவிற்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் நடித்து வெளிவந்த படங்களிலேயே சமீபத்தில் வெளிவந்த 'கௌதமிபுத்ர சட்டகர்னி' திரைப்படம் இந்தியாவிலும், உலக அளவிலும் நல்ல வசூலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதனால், மிகவும் உற்சாகமாக இருக்கிறார் பாலகிருஷ்ணா.

இந்தப் படத்திற்குப் பிறகு அவருடைய அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதில் ஒரு குழப்ப நிலை நீடித்து வருகிறது. தெலுங்குத் திரையுலகின் சில சீனியர் இயக்குனர்கள் பாலகிருஷ்ணாவை சந்தித்துக் கதை சொல்லியிருக்கிறார்கள். அதோடு, வித்தியாசமான தெலுங்குப் படங்களை இயக்கியுள்ள கிருஷ்ணவம்சியும் ஒரு கதையைச் சொல்லி சம்மதம் வாங்கியிருக்கிறார். ஆனால், அந்தக் கதையில் ஒரு முக்கியக் காட்சி இடம் பெற்றுதாம். அதாவது பாலகிருஷ்ணா படத்தில் தன்னுடைய அப்பாவிற்கு பாத பூஜை ஒன்றைச் செய்து போன்ற காட்சியாம். மற்றொருவருக்கு படத்தில் கூட பாத பூஜை செய்வதென்றால் அமிதாப் பச்சனைத் தவிர வேறு யார் நடித்தாலும் அது சரியாக இருக்காது என்று பாலகிருஷ்ணா சொல்லியுள்ளாராம். அதனால், அமிதாப்பை படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

இதனிடையே, தமிழ்ப் பட இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார், பாலகிருஷ்ணாவைச் சந்தித்து கதை ஒன்றைச் சொன்னதாகவும் அதில் நடிக்க பாலகிருஷ்ணாவும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது முழுவடிவம் பெறுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும் என்கிறார்கள்.


0 comments:

Post a Comment