தெலுங்கில் நடிக்க தயங்கிய வடிவேலு!
26 ஜன,2017 - 10:23 IST
அரசியல் சூறாவளியில் சிக்கி சினிமாவை விட்டே சிலகாலம் ஒதுங்கியிருந்தவர் வடிவேலு. அதன்காரணமாக கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வரை அவர் கோடம்பாக்கம் பக்கமே வராமல், சொந்த ஊரான மதுரையில் சொந்த பந்தங்களுடன் முகாமிட்டிருந்தார். அதனால் அவரது காமெடி மார்க்கெட்டை சந்தானமும், சூரியும் கைப்பற்றிக்கொண்டனர். இந்நிலையில், மறுபிரவேசத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த வடிவேலு, அது ஒர்க்அவுட் ஆகாமல் போகவே தற்போது மீண்டும் காமெடி ட்ராக்கில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் அவர் ரீ-என்ட்ரியாக இருந்தபோது, சிலர் தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு வடிவேலுவை அழைத்தார்களாம். முதலில் அதற்கு ஓகே சொன்ன வடிவேலு பின்னர் மறுத்து விட்டாராம். காரணம் கேட்டவர்களிடம், தமிழில் நடிக்காமல் தெலுங்கில் நடித்தால் தமிழில் நடிக்க பயந்துதான் வடிவேலு தெலுங்கிற்கு சென்று விட்டார் என்று கிண்டல் செய்வார்கள். அதனால் நான் தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்த பிறகுதான் மற்ற மொழிகளில் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம்.
0 comments:
Post a Comment