50 நாட்களைக் கடந்த துருவா
27 ஜன,2017 - 16:07 IST
ராம் சரண், ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்து நடித்த துருவா திரைப்படம் 50 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. டிசம்பர் 9ல் திரைக்கு வந்த துருவா திரைப்படம் இதுவரை ரூ 58 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனத்தார் கூறியுள்ளனர். இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கிய இப்படம் தமிழில் சூப்பர் ஹிட்டான தனிஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். தனிஒருவன் படத்தில் வில்லனாக அசத்திய அரவிந்த் சாமி துருவா படத்திலும் வில்லனாக நடித்து அசத்தினார். அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்தார். இவ்வெற்றியைக் கொண்டாட படக்குழுவினர் தயாராகி வருகின்றனர். இதில் டோலிவுட் பிரபலங்கள் பலரை அழைக்கவும் ராம் சரண் முடிவு செய்துள்ளாராம். துருவா படத்தைத் தொடர்ந்து ராம் சரண் இயக்குனர் சுகுமார் இயக்கும் கிராமத்து கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கின்றார். விரைவில் இப்படத்தின் பூஜை நடக்கவுள்ளது.
0 comments:
Post a Comment