Monday, January 30, 2017

சந்தனத்தேவனில் அமீருக்கு ஜோடியாக நடிக்கிறார் இனியா!


சந்தனத்தேவனில் அமீருக்கு ஜோடியாக நடிக்கிறார் இனியா!



30 ஜன,2017 - 13:38 IST






எழுத்தின் அளவு:








அமீரை நாயகனாக வைத்து பாரதிராஜா இயக்கயிருந்த படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். அந்த படத்தில் அமீருக்கு ஜோடியாக நடிக்கயிருந்தார் இனியா. அவர்கள் இருவரையும் வைத்து அப்போது போட்டோசெஷனும் நடந்தது. ஜல்லிக்கட்டு சம்பந்தமான கதையில் உருவாகயிருந்த அந்த படம் பின்னர் கைவிடப்பட்டது. அதையடுத்து வேறொரு கதையில் அன்னக்கொடி என்ற பெயரில் தனது மகன் மனோஜ், நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயரை வைத்து ஒரு படம் இயக்கினார் பாரதிராஜா.

இந்நிலையில், தற்போது ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து சந்தனத் தவன் என்ற படத்தை இயக்குகிறார் அமீர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் அந்த படத்தில் ஆர்யா அவரது தம்பி சத்யா ஆகியோரும் நடிக்க பட்டதாரி அதிதிமேனனும் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த படத்தில் அமீரும் ஒரு முக்கிய வேடத்தில் மாடு பிடி வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடி நடிகை தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கயிருந்த அதே இனியா இப்போது மீண்டும் ஒப்பந்தமாகியிருக்கிறார். பிப்ரவரி 5-ந்தேதிக்கு மேல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரிகிறது.


0 comments:

Post a Comment