மும்பையில் முகாமிட்ட ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ் பாபு
28 ஜன,2017 - 11:34 IST
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் ஆக்ஷ்ன் திரில்லர் படத்திற்கு சம்பவாமி என தற்காலிகமாக பெயரிட்டுள்ளனர். அகமதாபாப், ஐதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை முடித்த படக்குழு, அடுத்ததாக மும்பையில் முகாமிட்டுள்ளது. மகேஷ் பாபு, நாயகி ராகுல் ப்ரீத்தி சிங் பங்கேற்கும், இப்படத்தின் முக்கிய காட்சிகள் சிலவற்றை முருகதாஸ் இங்கு படமாக்கி வருகின்றாராம். ஜனவரி 26ல் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளிவரும் என மகேஷ் பாபு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் படக்குழு முடிவை மாற்றி விட்டனர். தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை என்.வி.பிரசாத் தாகூர் மதுவுடன் இணைந்து தயாரிக்கின்றார். இசையமைப்பாளர் ஹரீஷ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றார்.
0 comments:
Post a Comment