Saturday, January 28, 2017

அறம் படத்திற்கு முன்னதாக வெளியாகும் டோரா


அறம் படத்திற்கு முன்னதாக வெளியாகும் டோரா



28 ஜன,2017 - 17:35 IST






எழுத்தின் அளவு:








தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் கதாநாயகி யார் என்றால் அது நயன்தாராதான். தற்போது அவர் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். கத்தி கதாசிரியரான கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துவரும் 'அறம்' படம் ஏறக்குறைய தயாராகிவிட்டது. தாஸ் ராமசாமி இயக்கத்தில் உருவாகிவரும் 'டோரா' படத்தின் படப்பிடிப்பும் சமீபத்தில் முடிவடைந்தது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அறம் படம் வெளியாவதில் ஏதோ சிக்கல் நிலவுவதால் அதற்கு முன்னதாக 'டோரா' படம் வெளியாக உள்ளது. டோராவை மார்ச் 3 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. அறம், டோரா படப்பிடிப்பை முடித்ததும் 'பில்லா 2' புகழ் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகிவரும் 'கொலையுதிர் காலம்' படத்திற்காக தற்போது லண்டன் சென்றுள்ளார் நயன்தாரா. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாகும் இப்படம் சைக்கோ ஹாரர் த்ரில்லர் கதையாக உருவாகி வருகிறது. லண்டனில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இதுவும் முழுக்க முழுக்க கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவம் உள்ள படம். இந்தப் படத்தை முடித்த பிறகே, அதர்வாவின் 'இமைக்கா நொடிகள்', மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு டேட் தருவதாக சொல்லி இருக்கிறாராம்.


0 comments:

Post a Comment