மாணவர்கள் மீதான வழக்கு :முதல்வரிடம் லாரன்ஸ் கோரிக்கை
29 ஜன,2017 - 16:02 IST
ஜல்லிக்கட்டிற்காக சென்னை மெரினாவில் விவேகானந்தா மண்டபம் முன்பு ஒருவார காலமாக நடந்து வந்த போராட்டத்தில் நடிகர் லாரன்ஸ் மக்களுக்கு ஆதரவாக கலந்து கொண்டார் . போராட்டத்தை கலைக்க மக்கள் மீது தடியடி செய்யப்பட்டது. மாணவர்களையும் , இளைஞர்களையும் போலீஸ்சார்கள் கைது செய்தனர். அவர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற இன்று சென்னையில் முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து மனு அளித்தார் நடிகர் லாரன்ஸ். பத்திரிக்கையாளர்களை சந்தித்த லாரன்ஸ் இதைப்பற்றி பேசினார்.
லாரன்ஸ் கூறியதாவது....." மாணவர்களையும் , இளைஞர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக முதல் பன்னீர்செல்வாம் உறுதி அளித்திருக்கிறார். தாக்குதலில் காயம் அடைந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் மருத்துவத்திற்கும் உதவி செய்து தருவதாகவும் முதல்வர் உறுதியாக கூறியிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்காக நடவடிக்கை எடுத்ததற்கு முதல்வருக்கு நன்றி. அவசர சட்டம் கொண்டு வந்து நிரந்தர தீர்வு கொண்டு வந்தது வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்வு. " என்று லாரன்ஸ் கூறினார்
0 comments:
Post a Comment